TNPSC Thervupettagam

2024-25 ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் தமிழ்நாடு அரசின் கடன்கள்

January 3 , 2025 12 days 109 0
  • 2024-2025 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 45,000 கோடி ரூபாய் கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு வரை, மாநில மேம்பாட்டுக் கடன் பத்திர வெளியீடு (SDL) மூலம் தமிழ்நாடு அரசு 50,000 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டிலிருந்து பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) கடன் பெறுவதற்கான உச் சவரம்பு 3% ஆகும்.
  • 2021-22 முதல் 2024-25 ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு மின்துறைச் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் GSDPயில் 0.5 சதவீதம் கூடுதல் கடன் வாங்கப் பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் SDL வெளியீடு மூலம் பெறப்பட்ட கடனில் 5,96,619.2 கோடி ரூபாய் நிலுவையில் இருந்தது.
  • இது 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் 6,87,034.3 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் தமிழகத்தின் மொத்த நிலுவைத் தொகை 8,47,022.7 கோடி ரூபாயாக இருந்தது.
  • இது 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் 9,55,690.5 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்