2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்ற கடன்கள்
September 6 , 2024 78 days 123 0
2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) தமிழ்நாடு அரசு பெற்ற மொத்தச் சந்தைக் கடன்கள் 21,000 கோடி ரூபாயாக இருந்தது.
2023-2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், மாநில அரசு பெற்ற மொத்தச் சந்தைக் கடன் 25,000 கோடி ரூபாய் ஆகும்.
மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மாநில அரசு சந்தையில் இருந்து கடன் பெறுகிறது.
2024 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் மாதக் காலக் கட்டத்தில், 27,000 கோடி ரூபாய் கடன் பெற்று ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆனது முதலிடத்தில் உள்ளது, அதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது அதன் மொத்த வருவாய் வரவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 36,461.89 கோடி ரூபாயாக இருந்த SOTR ஆனது 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.13% அதிகரித்து 37,605.43 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழகத்தின் ஒட்டு மொத்த வருவாய் வரவுகள் ஆனது 55,467.63 கோடி ரூபாயாக இருந்தது.