TNPSC Thervupettagam

2024-25 ஆம் நிதியாண்டிற்கான நிதி கோரும் மசோதா

August 10 , 2024 108 days 133 0
  • மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செலவினக் கோரல்களில் சுமார் 140 லட்சம் கோடி ரூபாய்க்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.
  • இதன் மூலம் 2024-25 ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கைக்குத் தேவையான பாராளுமன்ற ஒப்புதல்களில் மூன்றில் இரண்டு பங்கு நிறைவு ஆகியுள்ளது.
  • இரயில்வே நிர்வாகம், கல்வி, சுகாதாரம் மற்றும் மீன்வளம் ஆகிய நான்கு முக்கிய அமைச்சகங்களுக்கான மானியங்கள் மீதான விவாதத்திற்குப் பிறகு கட்டாயமான நாடாளுமன்ற நடவடிக்கை நிறைவு (கில்லட்டின்) தீர்மானம் பயன்படுத்தப் பட்டது.
  • வேளாண்மை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஒத்துழைப்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை ஆகிய அந்த நான்கு அமைச்சகங்களுக்கான மானியங்களுக்கான கோரிக்கைகளும் மாநிலங்களவையில் ஒரே நேரத்தில் விவாதிக்கப் பட்டது.
  • இந்த அவையானது அந்த நிதி மசோதா மீதான விவாதங்களையும் மேற்கொண்டது ஆனாலும் அரசியலமைப்பின் படி, அத்தகைய மசோதாக்களை கீழவைக்கு அதனால் திருப்பி அனுப்ப மட்டுமே முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்