2024-25 ஆம் ஆண்டிற்கான மேலடுக்கு பிரிவில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NBFCs) பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதியன்று NBFC நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட ஒரு ஒழுங்குமுறைக் கட்டமைப்பான மற்றும் நிலை அடிப்படையிலான ஒழுங்குமுறையினை (SBR) வெளியிட்டது.
இந்தக் கட்டமைப்பு ஆனது NBFC நிறுவனங்களை அடிப்படை அடுக்கு (NBFC-BL), நடுத்தர அடுக்கு (NBFC-ML), மேல் அடுக்கு (NBFC-UL) மற்றும் முதன்மை அடுக்கு (NBFC-TL) என நன்கு வகைப்படுத்துகிறது.
இது மேலடுக்கில் உள்ள NBFC நிறுவனங்களை அவற்றின் சொத்து அளவு மற்றும் மதிப்பு முறையின்படி அடையாளம் காணும் வழிமுறையையும் வழங்குகிறது.