TNPSC Thervupettagam

2024/25 ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்குதார நாடு

April 22 , 2025 15 hrs 0 min 33 0
  • 2024-25 ஆம் ஆண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக 131.84 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்துடன் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
  • இதே காலக் கட்டத்தில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையானது, 99.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது.
  • கடந்த நிதியாண்டில், சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியானது 2023-24 ஆம் ஆண்டில் 16.66 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 14.5 சதவீதம் குறைந்து 14.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • இருப்பினும், 2023-24 ஆம் ஆண்டில் 101.73 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இறக்குமதிகள் ஆனது, 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 11.52 சதவீதம் அதிகரித்து 113.45 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தன.
  • 2023-24 ஆம் ஆண்டில் பதிவான 118.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும் போது, ​​2024-25 ஆம் ஆண்டில் 127.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்துடன் சீனாவானது இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்குதார நாடாகத் தொடர்ந்தது.
  • 2013-14 முதல் 2017-18 ஆம் ஆண்டு வரையில் மற்றும் 2020-21 ஆம் ஆண்டிலும் சீனா இந்தியாவின் முன்னணி வர்த்தகப் பங்குதார நாடாக இருந்தது.
  • சீனாவுக்கு முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகமானது நாட்டின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக இருந்தது.
  • 2021-22 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக திகழ்ந்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்