TNPSC Thervupettagam

2024-25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள்

March 23 , 2025 8 days 66 0
  • 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகளின் மதிப்பானது (சரக்கு மற்றும் சேவைகள் ஒரு சேர) 71.95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் 3.16 சதவீதம் என்ற நேர்மறையான வளர்ச்சியைப் பதிவாகியது.
  • 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான மொத்த இறக்குமதிகள் (சரக்குகள் மற்றும் சேவைகள் ஒரு சேர) 67.52 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது (-)11.34 சதவீதம் என்ற எதிர் மறையான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டு ஏப்ரல்-பிப்ரவரி மாத காலக் கட்டத்தில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள் ஆனது சுமார் 6.24 சதவீத நேர்மறையான வளர்ச்சியுடன் 750.53 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டு ஏப்ரல்-பிப்ரவரி மாத காலக் கட்டத்தில், 7.28 சதவீத வளர்ச்சியுடன் மொத்த இறக்குமதிகள் ஆனது 839.89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்