முடிவடைந்த 2024-25 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு மாநிலத்தில் முந்தைய ஆண்டை விட சற்று அதிக உணவு தானியச் சாகுபடி பதிவாகியுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் 37.98 லட்சம் ஹெக்டேராக இருந்த சாகுபடிப் பரப்பானது, 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 38.6 லட்சம் ஹெக்டேர் ஆகப் பதிவானது என்பதோடு இது 40.15 லட்சம் ஹெக்டேர் என்ற இலக்கை விட சுமார் 1.5 லட்சம் ஹெக்டேர் குறைவாகும்.
2024 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் ஏற்பட்ட ஃபெங்கல் புயல் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பதிவான பருவகாலம் சாரா கனமழை போன்ற நிகழ்வுகளால் 9.1 லட்சம் ஏக்கர் அல்லது 3.68 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்ச் சேதம் பதிவானது.
இதன் விளைவாக, அரசாங்கம் ஆனது, மாநிலப் பேரிடர் மீட்பு நிதியின் (SDRF) கீழ் 6.16 லட்சம் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக சுமார் 546 கோடி ரூபாய்களை வழங்கியது.
2025-26 ஆம் ஆண்டிற்கு, அரசாங்கம் மொத்தம் 40.3 லட்சம் ஹெக்டேர் நிலங்களை உணவு தானிய உற்பத்திக்கான இலக்காக நிர்ணயித்துள்ளது என்பதோடு இதில் நெல் சாகுபடியின் பங்கு 20.3 லட்சம் ஹெக்டேர்; மற்றும் சிறு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் சாகுபடியின் பங்கு தலா 10 லட்சம் ஹெக்டேர் ஆகும்.