2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் GST வசூல்
November 26 , 2024
14 hrs 0 min
27
- 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாடு மாநிலத்தின் மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் (SGST) 20.12% வளர்ச்சிப் பதிவாகியுள்ளது.
- தரவு கிடைக்கப் பெற்ற முக்கிய ஒப்பிடக் கூடிய மாநிலங்களில் இது மிக அதிகபட்ச வளர்ச்சி விகிதமாகும்.
- 2024-25 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழகத்தின் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) வசூல் ஆனது 20.12% அதிகரித்து 35,414.05 கோடி ரூபாயாக உள்ளது.
- கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது 29,481.97 கோடி ரூபாயாக இருந்தது.
- அதே காலகட்டத்தில், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றின் SGST வசூலில் 14% வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
- தரவுகளின்படி, மகாராஷ்டிரா 13.46% வளர்ச்சி விகிதத்தையும், கர்நாடகா 10% வளர்ச்சி விகிதத்தையும் கண்டுள்ளன.
Post Views:
27