2024-25 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் வருடாந்திர உச்ச கட்ட ஆற்றல் தேவை என்பது 20,806 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதியன்று தமிழக மாநிலத்தின் உச்சகட்ட ஆற்றல் தேவை 19,387 மெகாவாட் என்ற உச்சநிலையை எட்டியது.
சமீபத்தியத் தரவுகளின் படி, உச்ச கட்ட ஆற்றல் தேவையானது 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 20,806 மெகாவாட்டாகவும், மே மாதத்தில் 19,785 மெகாவாட்டாகவும், ஜூன் மாதத்தில் 19,800 மெகாவாட்டாகவும், ஜூலை மாதத்தில் 19,005 மெகா வாட்டாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 20,631 மெகாவாட்டாகவும் இருக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
இது 2024-25 ஆம் ஆண்டின் பருவமழை மற்றும் குளிர்காலப் பருவங்களில் 16,933 மெகாவாட் முதல் 18,465 மெகாவாட் வரை இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 20,460 மெகாவாட்டாக அதிகரிக்கக் கூடும்.
2024-25 ஆம் ஆண்டில் தென் பிராந்தியத்திற்கான வருடாந்திர உச்ச கட்ட ஆற்றல் தேவையானது 73,114 மெகாவாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருடாந்திர ஆற்றல் தேவையானது 132,871 மில்லியன் அலகாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதியன்று, தமிழக மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்குத் தினசரி நுகர்வு 423.785 மில்லியன் அலகுகள் நுகர்வு பதிவாகியது.