TNPSC Thervupettagam

2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்ற கடன்கள்

September 6 , 2024 33 days 90 0
  • 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) தமிழ்நாடு அரசு பெற்ற மொத்தச் சந்தைக் கடன்கள் 21,000 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2023-2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், மாநில அரசு பெற்ற மொத்தச் சந்தைக் கடன் 25,000 கோடி ரூபாய் ஆகும்.
  • மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் மாநில அரசு சந்தையில் இருந்து கடன் பெறுகிறது.
  • 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் மாதக் காலக் கட்டத்தில், 27,000 கோடி ரூபாய் கடன் பெற்று ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆனது முதலிடத்தில் உள்ளது, அதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) ஆனது அதன் மொத்த வருவாய் வரவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானப் பங்கினைக் கொண்டுள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 36,461.89 கோடி ரூபாயாக இருந்த SOTR ஆனது 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3.13% அதிகரித்து 37,605.43 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழகத்தின் ஒட்டு மொத்த வருவாய் வரவுகள் ஆனது 55,467.63 கோடி ரூபாயாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்