மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செலவினக் கோரல்களில் சுமார் 140 லட்சம் கோடி ரூபாய்க்கு மக்களவை ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் 2024-25 ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கைக்குத் தேவையான பாராளுமன்ற ஒப்புதல்களில் மூன்றில் இரண்டு பங்கு நிறைவு ஆகியுள்ளது.
இரயில்வே நிர்வாகம், கல்வி, சுகாதாரம் மற்றும் மீன்வளம் ஆகிய நான்கு முக்கிய அமைச்சகங்களுக்கான மானியங்கள் மீதான விவாதத்திற்குப் பிறகு கட்டாயமான நாடாளுமன்ற நடவடிக்கை நிறைவு (கில்லட்டின்) தீர்மானம் பயன்படுத்தப் பட்டது.
வேளாண்மை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஒத்துழைப்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை ஆகிய அந்த நான்கு அமைச்சகங்களுக்கான மானியங்களுக்கான கோரிக்கைகளும் மாநிலங்களவையில் ஒரே நேரத்தில் விவாதிக்கப் பட்டது.
இந்த அவையானது அந்த நிதி மசோதா மீதான விவாதங்களையும் மேற்கொண்டது ஆனாலும் அரசியலமைப்பின் படி, அத்தகைய மசோதாக்களை கீழவைக்கு அதனால் திருப்பி அனுப்ப மட்டுமே முடியும்.