2024 ஆம் ஆண்டிற்கான WMO அமைப்பினால் கைவிடப் பட்டப் புயல்களின் பெயர்கள்
April 17 , 2025 3 days 48 0
2024 ஆம் ஆண்டில் அவற்றினால் பதிவான உயிரிழப்பு மற்றும் அழிவு காரணமாக பெரில், ஹெலீன் மற்றும் மில்டன் ஆகிய புயல்களின் பெயர்கள் ஆனது, அதன் அட்லாண்டிக் பகுதிக்கான பெயர்ப் பட்டியலில் இருந்தும், ஜான் என்ற பெயரானது கிழக்கு பசிபிக் பகுதிக்கான பெயர்ப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன.
அட்லாண்டிக் பகுதியில் ஏற்படும் வருடாந்திரப் புயல் உருவாக்கப் பருவமானது, ஜூன் முதல் நவம்பர் வரை நீடிக்கும்.
கரீபியன் பகுதியில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியதுடன் பெரில் கடந்த ஆண்டு பதிவான 5 ஆம் வகை புயல் ஆகும்.
ஹெலீன் மற்றும் மில்டன் அமெரிக்காவில் பேரழிவு சேதத்தை ஏற்படுத்தியப் புயல்கள் ஆகும் என்பதோடு மேலும் ஜான் ஆனது மெக்சிகன் மாநிலமான குரேரோவில் கொடிய வெள்ளத்தை ஏற்படுத்தியப் புயலாகும்.
2005 ஆம் ஆண்டு புயல் உருவாக்கப் பருவத்தில், ஒரு அட்லாண்டிக் பருவப் புயல்கள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டப் புயல்களுக்கான பெயர்களின் எண்ணிக்கை ஐந்து ஆகும்.
2000 ஆம் ஆண்டுகளில் மிக அதிகபட்சமாக பத்தாண்டுகளில் நீக்கப் பட்டப் பெயர்கள் 24 ஆகும் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டுகளில் 16 பெயர்கள் நீக்கப்பட்டன.