2023-24 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த சந்தைக் கடன்களானது 1,13,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், தமிழ்நாடு மாநில அரசானது தொடர்ந்து நான்காவது நிதியாண்டில் அதிக கடன் பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது.
மகாராஷ்டிரா 1,10,000 கோடி ரூபாய், உத்தரப் பிரதேசம் 97,700 கோடி ரூபாய், கர்நாடகம் 81,000 கோடி ரூபாய், ராஜஸ்தான் 73,600 கோடி ரூபாய், ஆந்திரா 68,400 கோடி ரூபாய் ஆகிய அளவில் கடன் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், மாநில மேம்பாட்டுக் கடன் (SDL) எனப்படும் அரசுப் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் சந்தையில் இருந்து கடன் பெறுகின்றன.
2022-23 ஆம் நிதியாண்டிலும், 2021-22 ஆம் நிதியாண்டிலும் தமிழகத்தின் மொத்தச் சந்தைக் கடன்கள் 87,000 கோடி ரூபாயாக இருந்தது.
2024-25 ஆம் ஆண்டில் மொத்தமாக 1,55,584.48 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று நிலுவையில் உள்ள கடன் 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும்.