TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் அதிக கடன் பெற்ற மாநிலம்

April 6 , 2024 232 days 968 0
  • 2023-24 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த சந்தைக் கடன்களானது  1,13,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • இதன் மூலம், தமிழ்நாடு மாநில அரசானது தொடர்ந்து நான்காவது நிதியாண்டில் அதிக கடன் பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது.
  • மகாராஷ்டிரா 1,10,000 கோடி ரூபாய், உத்தரப் பிரதேசம் 97,700 கோடி ரூபாய், கர்நாடகம் 81,000 கோடி ரூபாய், ராஜஸ்தான் 73,600 கோடி ரூபாய், ஆந்திரா 68,400 கோடி ரூபாய் ஆகிய அளவில் கடன் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், மாநில மேம்பாட்டுக் கடன் (SDL) எனப்படும் அரசுப் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் சந்தையில் இருந்து கடன் பெறுகின்றன.
  • 2022-23 ஆம் நிதியாண்டிலும், 2021-22 ஆம் நிதியாண்டிலும் தமிழகத்தின் மொத்தச் சந்தைக் கடன்கள் 87,000 கோடி ரூபாயாக இருந்தது.
  • 2024-25 ஆம் ஆண்டில் மொத்தமாக 1,55,584.48 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று நிலுவையில் உள்ள கடன் 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்