2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 648.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ஆனது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 10.7 சதவீதம் அதிகரித்து 717.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 19 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுக் கடன் விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 19.1 சதவீதமாக இருந்தது.
அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன்கள் ஆனது, இந்தியாவின் வெளிநாட்டுக் கடனில் மிகப்பெரியப் பங்கினை கொண்டிருந்தது என்பதோடு இது 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 54.8 சதவீத பங்கைக் கொண்டிருந்தது.
அதைத் தொடர்ந்து இந்திய ரூபாய் (30.6 சதவீதம்), ஜப்பானிய யென் (6.1 சதவீதம்), SDR (4.7 சதவீதம்) மற்றும் யூரோ (3 சதவீதம்) ஆகியவை உள்ளன.