சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது, 2024 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
2023 ஆம் ஆண்டில் ஐந்து சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது இந்த ஆண்டு 5.2% ஆக உயரும் என்று முதலில் கணித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 4.9% ஆக இருக்கும் என்று ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முகமை கணித்துள்ளது.
183 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பில்லாதவர்கள் என்ற வரையறையினுள் இடம் பெறுகின்றனர் என்ற நிலையில் வேலை செய்ய விரும்புகின்ற ஆனால் வேலை வாய்ப்பில்லாதவர்களின் எண்ணிக்கை 402 மில்லியனாக உள்ளது.
15.3 சதவீத ஆண்களுடன் ஒப்பிடுகையில், வேலை செய்ய விரும்புகின்ற, வேலை வாய்ப்பில்லாதவர்களில் 22.8 சதவீதத்துடன் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள பெண்கள் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக வருமானம் கொண்ட நாடுகளில், பெண்கள் மத்தியில் இந்த விகிதம் 9.7% ஆகவும், ஆண்கள் மத்தியில் 7.3% ஆகவும் உள்ளது.
2024 ஆம் ஆண்டில் 45.6% பணிக்குச் செல்லும் வயது பெண்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர்.
ஆண்கள் மத்தியில், இந்த எண்ணிக்கை 69.2% ஆக இருந்தது.