TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் செல்வ வளம் மிக்க முதல்வர்கள்

January 2 , 2025 5 days 159 0
  • 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு 1,630 கோடி ரூபாயாகும்.
  • 931 கோடி ரூபாய்க்கு மேலானச் சொத்துக்களுடன், ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் N.சந்திரபாபு நாயுடு இந்தியாவின் பணக்கார முதல்வர் ஆக உள்ளார்.
  • இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் அல்லது NNI ஆனது 2023-2024 ஆம் ஆண்டில் தோராயமாக 1,85,854 ரூபாயாக இருந்தது.
  • ஒரு முதலமைச்சரின் சராசரி சுய வருமானம் 13,64,310 ரூபாய் ஆகும் என்ற நிலையில், இது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகமாகும்.
  • அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் பேமா காந்து 332 கோடி ரூபாய் என்ற மொத்தச் சொத்து மதிப்புடன் இரண்டாவது பணக்கார முதல்வர் ஆக உள்ளார்.
  • கர்நாடகா மாநில முதல்வரான சித்தராமையா 51 கோடி ரூபாய்க்கு மேலானச் சொத்துக்களுடன் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
  • மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெறும் 15 லட்ச ரூபாயுடன் மிக ஏழ்மையான முதல்வராக உள்ளார்.
  • ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, 55 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன், இந்தப் பட்டியலில் இரண்டாவது ஏழ்மையான முதல்வர் ஆகவும், பினராயி விஜயன் 1.18 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
  • 13 (42%) முதலமைச்சர்கள் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளனர் என்ற நிலையில் அதில் 10 (32%) பேர் தங்கள் மீது மிக கடுமையான குற்றவியல் வழக்குகள் உள்ளதாக அறிவித்துள்ளனர்.
  • 31 முதல்வர்களில் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லியின் அதிஷி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள் ஆவர்.
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 8.8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துடன் 14வது இடத்தினைப் பிடித்துள்ளார்.
  • IPC விதிகளின் கீழான 11 வழக்குகளுடன் அவருக்கு எதிராக உள்ள அதிகபட்சமாக 47 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்