TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி

July 14 , 2024 5 days 106 0
  • தனது மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியானது 50% சதவீதத்தினை தாண்டியுள்ளது என்ற வகையில் இது ஏப்ரல் மாதத்தில் மிகவும் அதிகபட்சமாக 52% ஆக இருந்தது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது காற்று, சூரிய ஒளி, நீர் மற்றும் இணை மின்னாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகா வாட் என்ற அதிக எரிசக்தி தேவை பதிவாகி உள்ளது, என்பதோடு மின் நுகர்வானது அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 454 மில்லியன் அலகுகள் (MUs) பதிவாகியுள்ளது.
  • நம் மாநிலத்தின் மின்சார உற்பத்தி அலகுகள் ஆனது, மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 24,530 மில்லியன் அலகுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியைக் கொண்டிருந்தன.
  • நம் மாநிலத்தின் மொத்த உற்பத்தி 48,835 மில்லியன் அலகுகள் ஆகும் என்ற நிலையில் இது சராசரியாக 50% தூய்மையான ஆற்றல் கலவையைக் குறிக்கிறது.
  • மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 34,700 மெகாவாட் ஆகும்.
  • நீர் மின்னாற்றல் (2,300 மெகாவாட்), காற்று ஆற்றல் (8,750 மெகாவாட்), சூரிய மின்னாற்றல் (6,550 மெகாவாட்) மற்றும் இணை மின்னாக்கம் (700 மெகாவாட்) உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறன் 18,300 மெகாவாட் ஆகும்.
  • ஏப்ரல் 30 ஆம் தேதியன்று சென்னையில் 4,380 மெகாவாட் ஆற்றல் தேவை என்பது  பதிவானதையடுத்து, நம் மாநிலத்தில் ஆற்றல் தேவை 20,500 மெகாவாட்டைத் தாண்டி 20,700 மெகாவாட்டைத் தொட்டது.
  • அதே மாதத்தில், சுமார் 12,960 மில்லியன் அலகுகள் என்ற மொத்த உற்பத்தியில் அதிக பட்சமாக 6,900 மில்லியன் அலகுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பதிவு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்