தமிழ்நாடு மாநிலத்தில் இதுவரை 67 தீவிர வானிலை நாட்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் தீவிர வானிலை நிகழ்வுகளில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை இம்மாநிலம் எதிர்கொண்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 27 நாட்களை விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.
இந்தக் கூர்மையான அதிகரிப்பு ஆனது பருவநிலை இந்தியா 2024 என்ற அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இந்த தீவிர வானிலை நிகழ்வுகளால் சுமார் 25 மனித உயிரிழப்புகள், 14 கால்நடை உயிரிழப்புகள் மற்றும் 149 வீடுகள் சேதம் போன்றவை பதிவாகியுள்ளன.
சீரற்ற மழைப்பொழிவு, கடுமையான வெப்ப அலைகள் மற்றும் புயல் உருவாக்கம் காரணமாக தமிழகத்தில் 1,039 ஹெக்டேர் பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 274 நாட்களுள் 255 நாட்களில் இந்தியா தீவிர வானிலையை எதிர்கொண்டுள்ளது.
இது முந்தைய இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட தீவிர வானிலைப் பதிவான நாட்களின் எண்ணிக்கையை மிஞ்சுகிறது.