2024 ஆம் ஆண்டில் நலத் திட்டங்களுக்கான வருடாந்திர வருமான வரம்பு
December 20 , 2024 2 days 50 0
தமிழ்நாட்டின் சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையானது இங்கு குடும்பங்களின் வருடாந்திர வருமான உச்ச வரம்பினை 72,000 ரூபாயிலிருந்து 1.20 லட்சம் ரூபாயாக அதிகாரப்பூர்வமாக உயர்த்தியுள்ளது.
பொருளாதார நிலையின் மாற்றத்தினால், தமிழகத்தில் தனிநபர் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
வருமான உச்ச வரம்பு திருத்தப்பட்டதால், நலத் திட்டங்களுக்கான பயனாளிகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்படும்.
இத்துறையானது, 1993 ஆம் ஆண்டில் 12,000 ரூபாயாக இருந்த வருடாந்திர வருமான உச்ச வரம்பினை 2008 ஆம் ஆண்டில் 24,000 ரூபாயாக திருத்தியமைத்தது.
மேலும், 2012 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களுக்கு 24,000 ரூபாயாக இருந்த இந்த வரம்பு 40,000 ரூபாயாகவும், நகர்ப்புறங்களுக்கு 60,000 ரூபாயாகவும் திருத்தப்பட்டது.
இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் வருமான உச்ச வரம்பில் கடைசித் திருத்தம் செய்யப் பட்டு அது 72,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.