2024 ஆம் ஆண்டில் மாநிலத்தின் சதுப்புநிலப் பரப்பளவு
March 18 , 2025 15 days 76 0
தமிழ்நாட்டில் சதுப்புநிலக் காடுகளின் பரப்பளவு ஆனது கடந்த சில ஆண்டுகளில் சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பதோடு இது 2021 ஆம் ஆண்டில் 4,500 ஹெக்டேராக இருந்த இது 2024 ஆம் ஆண்டில் 9,039 ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
மொத்தப் பரப்பளவில் புதிய தோட்டங்களின் பங்கு 40.1% (3,625 ஹெக்டேர்) ஆகவும், தற்போதுள்ள சதுப்புநிலக் காடுகளின் பங்கு 59.9% (5,414 ஹெக்டேர்) ஆகவும் உள்ளன.
‘தமிழ்நாட்டின் சதுப்புநிலக் காடுகளுக்கான கடல்சார் சூழலமைவுகளில் காணப்படும் கார்பன் கண்காணிப்பு’ என்ற தலைப்பிலான அறிக்கையானது, திருவாரூர் மாவட்டம் ஆனது 2,142 ஹெக்டேர் பரப்பினை உள்ளடக்கிய மிகப்பெரிய சதுப்புநிலப் பரப்பைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆனது மொத்தம் சுமார் 2,063 ஹெக்டேர்கள் பரப்புடன் அதனைத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது என்பதோடு இதில் 854 ஹெக்டேர்கள் பரப்பிலான தோட்டங்களும் சுமார் 1,209 ஹெக்டேர்கள் பரப்பிலான இயற்கைச் சதுப்பு நிலங்களும் உள்ளன.
இந்த இரண்டு மாவட்டங்களும் ஒருசேர, தமிழ்நாட்டின் மொத்த சதுப்புநிலக் காடுகள் மற்றும் தோட்டப் பரப்பில் சுமார் பாதியளவினைக் கொண்டுள்ளன.
கடலூர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய சில மாவட்டங்களில் உள்ள சதுப்புநிலப் பகுதிகளும் கணிசமான கார்பன் சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளன என்பதோடு இவற்றின் மொத்த கார்பன் இருப்பு முறையே ஹெக்டேருக்கு 249 டன், ஹெக்டேருக்கு 145 டன் மற்றும் ஹெக்டேருக்கு 77.5 டன் ஆகும்.
விழுப்புரம் (ஹெக்டேருக்கு சுமார் 2.59 டன்) மற்றும் திருவள்ளூர் (ஹெக்டேருக்கு 13.1 டன்) ஆகியவை குறைந்த அளவு கார்பன் பிடிப்புத் திறனுடன் ஒரு குறைவான அடர்த்தி கொண்ட சதுப்புநிலப் பகுதிகள் ஆகும்.