TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டில் வண்ணத்துப் பூச்சிகளின் இடம் பெயர்வு

October 8 , 2024 13 hrs 0 min 48 0
  • தமிழ்நாடு மாநிலத்தில், செப்டம்பர் மாதத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி டானைனே துணைக் குடும்பத்தைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் பெரிய அளவில் இடம் பெயர்ந்துள்ளன.
  • வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அருகில் உள்ள பல்வேறு மலைத் தொடர்களை நோக்கி அவை இடம் பெயர்கின்றன.
  • ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பொதுவாக ‘வரியன் மற்றும் கருப்பன்' என்று அழைக்கப் படும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் சமவெளிகளை நோக்கி இடம் பெயர்கின்றன.
  • இந்த இடம் பெயர்வு ஆனது தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன் நிகழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்