2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகள்
January 10 , 2024 320 days 292 0
2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இது எதிர்பார்க்கப்பட்ட சுமார் 5 லட்சம் கோடி ரூபாயை விட அதிகமாகும் என்பதோடு, 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற முந்தைய உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஈர்க்கப் பட்ட முதலீட்டு மதிப்பை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்த முதலீடானது பல்வேறு தொழில்துறைகளில் சுமார் 27 லட்சம் அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ள 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) மூலம் எட்டப் பட்டது.
டாடா பவர் நிறுவனம் (70,800 கோடி ரூபாய்), அதானி குழுமம் (42,768 கோடி ரூபாய்), செம்ப்கார்ப் (36,238 கோடி ரூபாய்), லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (17,400 கோடி ரூபாய்) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (17,000 கோடி ரூபாய்) ஆகியவற்றால் சில பெரிய முதலீட்டு முன்மொழிதல்கள் மேற் கொள்ளப் பட்டன.
தொழில் துறை வாரியான முதலீடுகள்,
தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மூலம் 3,79,809 கோடி ரூபாய் திரட்டப்பட்டது;
எரிசக்தி துறை மூலம் 1,35,157 கோடி ரூபாய்;
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மூலம் 62,939 கோடி ரூபாய் மற்றும்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ணிம சேவைகள் துறை மூலம் 22,130 கோடி ரூபாய்.
அதோடு, MSME துறை மூலம் 63,573 கோடி ரூபாய் முதலீடு ஈட்டப்பட்டுள்ளது.