47வது உலகத் திறன்கள் போட்டி ஆனது செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை பிரான்சின் லியோன் நகரில் நடைபெற்றது.
இந்தியா தங்கும் விடுதி வரவேற்பில் வெண்கலப் பதக்கம் பெற்றது; அடுமனை மற்றும் இனிப்புப் பொருட்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம்; மற்றும் சமையல் துறையில் சிறந்து விளங்குவதற்கான பதக்கம் ஆகியவற்றினையும் வென்றது.
ஒட்டு மொத்தமாக, இந்தியா நான்கு வெண்கலப் பதக்கங்களையும், திறன் சார் போட்டிகளில் 12 பதக்கங்களையும் வென்றது.
இந்தப் போட்டியானது உலகின் மிகப்பெரிய தொழிற்கல்வி மற்றும் மிகவும் சிறந்த திறன்களுக்கான போட்டியாகும்.
இந்தப் போட்டியில் பல்வேறு வர்த்தகங்கள் மற்றும் தொழில்களில் ஏறக்குறைய 70 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர்.