அமெரிக்காவில் உள்ள ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) நிறுவனமானது 2024 ஆம் ஆண்டு உலகளாவிய காற்று அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு ஆனது உலகளவில் சுமார் 8.1 மில்லியன் உயிர் இழப்புகளுக்குக் காரணமாக இருந்தது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு உட்பட, உயிரிழப்பிற்கான இரண்டாவது முக்கிய இடர் காரணியாக இது திகழ்கிறது.
2021 ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உலக உயிரிழப்புகளில் சீனா (2.3 மில்லியன் இறப்புகள்) மற்றும் இந்தியா (2.1 மில்லியன் இறப்புகள்) ஆகியவை 55% பங்கினை கொண்டுள்ளன.
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒவ்வொரு நாளும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 464 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
உலக மக்கள் தொகையில் 99% பேர் ஆரோக்கியமற்ற அளவில் PM2.5 மாசு உள்ள இடங்களில் வாழ்கின்றனர்.
PM2.5 துகள்கள் காற்றில் காணப்படும் சிறிய மாசுகள் ஆகும்.
காற்று மாசுபாடு காரணாக ஏற்படும் உயிரிழப்புகளில் 90%க்கும் அதிகமானவை இந்த PM2.5 துகள்களின் மாசுபாட்டின் காரணமாக ஏற்படுகின்றன.