2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பதிவான காட்டுத்தீ நிகழ்வுகள்
March 25 , 2025 8 days 55 0
2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் 3,380 காட்டுத் தீ விபத்துகள் பதிவானது: இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகும்.
இது 2021-22 ஆம் ஆண்டில் பதிவான 1,035 விபத்துகள் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் பதிவான 1,998 தீ விபத்துகளிலிருந்து கடுமையான அதிகரிப்பைக் குறிக்கிறது.
2001 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட தீ விபத்துகளால் தமிழ்நாடு மாநிலத்தில் 1.04 கிலோமீட்டர் ஹெக்டேர் (கிலோஹெக்டேர்) மரங்கள் அழிந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 148 ஹெக்டேர் (ஹெக்டேர்) இழப்பு பதிவானது என்ற ஒரு நிலையில் இது அந்த ஆண்டு இழந்த மொத்த மரப் பரப்பில் 6.8 சதவீதத்தைக் குறிக்கிறது.
VIIRS (கட்புலனாகும் அகச்சிவப்பு வரைபடமாக்கல் கதிர்வீச்சுமானி தொகுப்பு) போன்ற கண்காணிப்பு அமைப்புகள் ஆனது, சமீபத்தியக் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக தீ எச்சரிக்கைகளைக் கண்டறிந்துள்ளன.
1951 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்படத் தொடங்கியதிலிருந்து, 2024 ஆம் ஆண்டில் ஊட்டி பகுதியில் அதன் அதிகபட்ச வெப்பநிலையான 29 டிகிரி செல்சியஸ் பதிவானது.
சமீபத்தியத் தமிழக வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத் தீகளில் ஒன்று 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணியில் ஏற்பட்டது.