TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பதிவான காட்டுத்தீ நிகழ்வுகள்

March 25 , 2025 6 days 50 0
  • 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் 3,380 காட்டுத் தீ விபத்துகள் பதிவானது: இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாகும்.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் பதிவான 1,035 விபத்துகள் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் பதிவான 1,998 தீ விபத்துகளிலிருந்து கடுமையான அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • 2001 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட தீ விபத்துகளால் தமிழ்நாடு மாநிலத்தில் 1.04 கிலோமீட்டர் ஹெக்டேர் (கிலோஹெக்டேர்) மரங்கள் அழிந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 148 ஹெக்டேர் (ஹெக்டேர்) இழப்பு பதிவானது என்ற ஒரு நிலையில் இது அந்த ஆண்டு இழந்த மொத்த மரப் பரப்பில் 6.8 சதவீதத்தைக் குறிக்கிறது.
  • VIIRS (கட்புலனாகும் அகச்சிவப்பு வரைபடமாக்கல் கதிர்வீச்சுமானி தொகுப்பு) போன்ற கண்காணிப்பு அமைப்புகள் ஆனது, சமீபத்தியக் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக தீ எச்சரிக்கைகளைக் கண்டறிந்துள்ளன.
  • 1951 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்படத் தொடங்கியதிலிருந்து, 2024 ஆம் ஆண்டில் ஊட்டி பகுதியில் அதன் அதிகபட்ச வெப்பநிலையான 29 டிகிரி செல்சியஸ் பதிவானது.
  • சமீபத்தியத் தமிழக வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத் தீகளில் ஒன்று 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணியில் ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்