2024 ஆம் ஆண்டு தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை – தமிழ்நாடு
April 24 , 2024 214 days 1128 0
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக மாநிலத்தில் முந்தையப் பொதுத் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட புள்ளி விவரங்களை விட இது ஒப்பீட்டளவில் குறைவாகும்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6,23,33,925 வாக்காளர்களில் 4,34,58,875 பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி வாக்கு செலுத்தினர்.
இதில் சதவீத அடிப்படையில், பெண் வாக்காளர்கள் (69.85%) எண்ணிக்கையானது ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையினை (69.58%) மிகவும் ஒரு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விஞ்சியுள்ளது.
தருமபுரியில் அதிகபட்சமாக 81.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய சென்னையில் வாக்குப் பதிவானது 53.96 சதவீதம் ஆக குறைந்துள்ளது.
ஒன்பது இடங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர்.
‘இதர’ பிரிவில், கரூரில் அதிக சதவீத வாக்குகளும் (62.22), தருமபுரியில் (50.28) அதிக வாக்குகளும் பதிவாகியுள்ளது.