TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க எண்ணிக்கை

August 18 , 2024 96 days 211 0
  • 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆனது தலா 40 தங்கப் பதக்கங்களுடன் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்ற ஒரு நாடு என்ற பட்டத்தினைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • அமெரிக்கா 126 (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) பதக்கங்களை வென்றுள்ளது.
  • சீனா 91 (40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம்) மொத்தப் பதக்க எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவானது, ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 6 பதக்கங்களுடன், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 71வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் உட்பட 7 பதக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக 48வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் பதக்க எண்ணிக்கையினை விடக் குறைவாகும்.
  • இந்த ஆண்டு பதக்கம் வென்ற வீரர்கள்:
    • மனு பாக்கர் - வெண்கலம்
    • மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் - வெண்கலம்
    • ஸ்வப்னில் குசலே - வெண்கலம்
    • இந்திய ஹாக்கி அணி - வெண்கலம்
    • நீரஜ் சோப்ரா - வெள்ளி
    • அமன் செஹ்ராவத் - வெண்கலம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்