TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நோட்டா பதிவு

June 9 , 2024 168 days 317 0
  • தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய போது, ​​ஏறக்குறைய 4.67 லட்சம் வாக்காளர்கள் மேற்கண்ட எவரும் இல்லை (நோட்டா) என்ற விருப்பத் தேர்வினைத் தேர்வு செய்துள்ளனர்.
  • மாநிலத்திலேயே அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் மொத்தம் 26,450 வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்வு செய்தனர் என்ற நிலையில் திண்டுக்கல் (22,120) மற்றும் திருவள்ளூர் (SC) (18,978) வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
  • நோட்டா வாக்குகள் மிகவும் குறைவாக கன்னியாகுமரி (3,756), இராமநாதபுரம் (6,295) மற்றும் கடலூரில் (7,292) பதிவாகியுள்ளது.
  • நோட்டா 19 இடங்களில் 1 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
  • 2014 ஆம் ஆண்டு தேர்தலில், நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட போது, ​​தமிழகத்தில் சுமார் 5.7 லட்சம் வாக்காளர்கள் நோட்டா விருப்பத் தேர்வினைத் தேர்வு செய்தனர்.
  • 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 3.45 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே நோட்டா விருப்பத் தேர்வினைத் தேர்ந்தெடுத்தனர்.
  • 2021 ஆம் ஆண்டில் 0.75 சதவீதமாகப் பதிவான நோட்டா, 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 1.07% ஆக பதிவாகியுள்ளதால் நோட்டா பதிவில் சரிவுப் போக்கு பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்