TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்த அறிக்கை

December 30 , 2024 60 days 92 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்த ஒரு விரிவான புள்ளி விவர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் 91,19,50,734 ஆக இருந்த மக்களவைக்குத் தேர்தலுக்காகப் பதிவு செய்யப் பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 97,97,51,847 வாக்காளர்கள் ஆக உயர்ந்தது.
  • 2019 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.43% அதிகரித்துள்ளனது.
  • பதிவு செய்யப்பட்ட 97.97 கோடி வாக்காளர்களில், 47.63 கோடி பேர் பெண்கள் ஆவர் என்ற நிலையில் 2019 ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்களில் 48.09% (43.85 கோடி) ஆக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையானது தற்போது 48.62% ஆக உள்ளது.
  • பெண் வாக்காளர்களில் அதிக சதவீதப் பங்குடன் புதுச்சேரி முன்னிலையில் உள்ளது (53.03%), அதைத் தொடர்ந்து கேரளா (51.56%) இடம் பெற்றுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் 1,000 ஆண்களுக்கு சுமார் 926 ஆக இருந்த பெண்-ஆண் வாக்காளர் விகிதம் ஆனது தற்போது 946 என்ற அளவினை எட்டியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் 64.64 கோடி வாக்குகள் பதிவானது. 2019 ஆம் ஆண்டில் 61.4 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • இவற்றில் 64.21 கோடி EVM வாக்குகள் (32.93 கோடி ஆண், 31.27 கோடி பெண், 13,058 மூன்றாம் பாலினத்தவர்) மற்றும் 42.81 லட்சம் தபால் வாக்குகள் ஆகும்.
  • அசாம் மாநிலத்தில் உள்ள துப்ரி எநனுமிடத்தில் மிக அதிகபட்சமாக 92.3% வாக்குகள் பதிவாகியுள்ளன அதே சமயம் ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மிகக் குறைவாக 38.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 10,52,664 வாக்குச் சாவடிகள் இடம் பெற்று இருந்த நிலையில் இது 2019 ஆம் ஆண்டில் 10,37,848 ஆக இருந்தது.
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிகவும் அதிகபட்சமாக 1,62,069 வாக்குச் சாவடிகளும், லட்சத் தீவில் குறைந்தபட்சமாக 55 வாக்குச் சாவடிகளும் அமைக்கப் பட்டன.
  • 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடச் செய்யும் போது பீகார் மாநிலத்தில் 4,739 கூடுதல் நிலையங்களுடன் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையில் மிக அதிக அதிகரிப்பு பதிவானது, அதைத் தொடர்ந்து 1,731 சாவடி அதிகரிப்புகளுடன் மேற்கு வங்காளம் இடம் பெற்றுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் ஐந்து தென் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாடு வாழ் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்துள்ளனர் - கேரளா (89,839), ஆந்திரப் பிரதேசம் (7,927), தெலுங்கானா (3,470), தமிழ்நாடு (3,432) மற்றும் கர்நாடகா (3,148).
  • 2019 ஆம் ஆண்டில், 99,844 பேர் வெளிநாட்டு வாக்காளர்களாக வாக்குகளைப் பதிவு செய்தனர்.
  • கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற பல பெரிய மாநிலங்களில் வெளிநாட்டு வாக்காளர்களின் வாக்களிப்பு சுழிய அளவில் இருந்தது.
  • மகாராஷ்டிராவில் அதிக பெண் வேட்பாளர்கள் (111) தேர்தலில் பங்கேற்றனர், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (80) மற்றும் தமிழ்நாடு (77) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • எனினும், 152 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் பங்கேற்கவில்லை.
  • தமிழ்நாடு மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான மூன்றாம் பாலின வாக்காளர்கள் (8,467) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
  • இத்தேர்தலில் போட்டியிட்ட 3,921 பேர் சுயேட்சை வேட்பாளர்களில் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்