இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்த ஒரு விரிவான புள்ளி விவர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் 91,19,50,734 ஆக இருந்த மக்களவைக்குத் தேர்தலுக்காகப் பதிவு செய்யப் பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையானது 2024 ஆம் ஆண்டில் 97,97,51,847 வாக்காளர்கள் ஆக உயர்ந்தது.
2019 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.43% அதிகரித்துள்ளனது.
பதிவு செய்யப்பட்ட 97.97 கோடி வாக்காளர்களில், 47.63 கோடி பேர் பெண்கள் ஆவர் என்ற நிலையில் 2019 ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்களில் 48.09% (43.85 கோடி) ஆக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையானது தற்போது 48.62% ஆக உள்ளது.
பெண் வாக்காளர்களில் அதிக சதவீதப் பங்குடன் புதுச்சேரி முன்னிலையில் உள்ளது (53.03%), அதைத் தொடர்ந்து கேரளா (51.56%) இடம் பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டில் 1,000 ஆண்களுக்கு சுமார் 926 ஆக இருந்த பெண்-ஆண் வாக்காளர் விகிதம் ஆனது தற்போது 946 என்ற அளவினை எட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 64.64 கோடி வாக்குகள் பதிவானது. 2019 ஆம் ஆண்டில் 61.4 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் 64.21 கோடி EVM வாக்குகள் (32.93 கோடி ஆண், 31.27 கோடி பெண், 13,058 மூன்றாம் பாலினத்தவர்) மற்றும் 42.81 லட்சம் தபால் வாக்குகள் ஆகும்.
அசாம் மாநிலத்தில் உள்ள துப்ரி எநனுமிடத்தில் மிக அதிகபட்சமாக 92.3% வாக்குகள் பதிவாகியுள்ளன அதே சமயம் ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மிகக் குறைவாக 38.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 10,52,664 வாக்குச் சாவடிகள் இடம் பெற்று இருந்த நிலையில் இது 2019 ஆம் ஆண்டில் 10,37,848 ஆக இருந்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மிகவும் அதிகபட்சமாக 1,62,069 வாக்குச் சாவடிகளும், லட்சத் தீவில் குறைந்தபட்சமாக 55 வாக்குச் சாவடிகளும் அமைக்கப் பட்டன.
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடச் செய்யும் போது பீகார் மாநிலத்தில் 4,739 கூடுதல் நிலையங்களுடன் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையில் மிக அதிக அதிகரிப்பு பதிவானது, அதைத் தொடர்ந்து 1,731 சாவடி அதிகரிப்புகளுடன் மேற்கு வங்காளம் இடம் பெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஐந்து தென் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாடு வாழ் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்துள்ளனர் - கேரளா (89,839), ஆந்திரப் பிரதேசம் (7,927), தெலுங்கானா (3,470), தமிழ்நாடு (3,432) மற்றும் கர்நாடகா (3,148).
2019 ஆம் ஆண்டில், 99,844 பேர் வெளிநாட்டு வாக்காளர்களாக வாக்குகளைப் பதிவு செய்தனர்.
கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற பல பெரிய மாநிலங்களில் வெளிநாட்டு வாக்காளர்களின் வாக்களிப்பு சுழிய அளவில் இருந்தது.
மகாராஷ்டிராவில் அதிக பெண் வேட்பாளர்கள் (111) தேர்தலில் பங்கேற்றனர், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (80) மற்றும் தமிழ்நாடு (77) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
எனினும், 152 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் பங்கேற்கவில்லை.
தமிழ்நாடு மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான மூன்றாம் பாலின வாக்காளர்கள் (8,467) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலில் போட்டியிட்ட 3,921 பேர் சுயேட்சை வேட்பாளர்களில் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர்.