மூன்றாவது மக்களாட்சிக்கான உச்சி மாநாடு (S4D3) ஆனது, தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது.
முதன்முறையாக அமெரிக்காவிற்கு வெளியே வேறொரு நாட்டில் நடத்தப்பட்ட இந்த உச்சி மாநாடு ஆனது, மக்களாட்சி (ஜனநாயகம்) பற்றிய கருத்தை உலகளவில் நன்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்டது.
இந்நிகழ்வின் கருத்துரு, “எதிர்காலச் சந்ததியினருக்கான மக்களாட்சி” என்பதாகும்.
இந்த ஆண்டிற்கான உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் ஆனது, மக்கள் மத்தியில் ஏற்படும் தவறான தகவல் பரவல், செயற்கை நுண்ணறிவு மற்றும் போலிப் பதிவுகள் உள்ளிட்ட எண்ணிம ஊடகம் சார்ந்த அச்சுறுத்தல்களை மையமாகக் கொண்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 2021 ஆம் ஆண்டில் இந்த உச்சி மாநாட்டினை நிறுவச் செய்தார்.