2024 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் குடும்பக் கடன்
April 22 , 2024 215 days 273 0
இந்தியாவின் குடும்பக் கடன் மதிப்புகள், 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் (Q3FY24) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 40 சதவீதத்தை எட்டியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
நிகர நிதிச் சேமிப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீதமாகச் சரிந்தது.
2022-23 ஆம் ஆண்டின் இதே காலக் கட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.5 சதவீதமாக இருந்த குடும்பங்களின் மொத்த நிதிச் சேமிப்பானது முந்தைய ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 10.8 சதவீதமாகச் சற்று அதிகரித்தது.
இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக இருந்த கடன் இருப்புகள் ஆனது 5.8 சதவீதமாக அதிகரித்தன.
குடும்பங்களின் சொத்து சேமிப்பானது, 2022-23 ஆம் ஆண்டில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியது என்பதோடு குடும்பங்களின் மொத்தச் சேமிப்பு ஆனது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 18.4 சதவீதமாகச் சரிந்தது.