இந்தியாவின் காபி ஏற்றுமதியானது 2024 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் 1,146.9 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில், 29 சதவீதம் அதிகரிப்புடன் இது 803.8 மில்லியன் டாலராக இருந்தது.
இந்த எண்ணிக்கையானது, 2021 ஆம் நிதியாண்டின் அதே காலக் கட்டத்தில் சுமார் 460 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.
கர்நாடகாவில் உள்ள சிக்மங்களூரு, குடகு மற்றும் ஹாசன் ஆகிய பகுதிகள் 2022-23 ஆம் ஆண்டில் 2,48,020 மெட்ரிக் டன்களுடன் அரபிகா மற்றும் ரோபஸ்டா ரக காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளன.
இதில் கேரளா 72,425 மெட்ரிக் டன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து 18,700 மெட்ரிக் டன்களுடன் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.