TNPSC Thervupettagam

2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி

January 4 , 2025 18 days 108 0
  • இந்தியாவின் காபி ஏற்றுமதியானது 2024 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் 1,146.9 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில், 29 சதவீதம் அதிகரிப்புடன் இது 803.8 மில்லியன் டாலராக இருந்தது.
  • இந்த எண்ணிக்கையானது, 2021 ஆம் நிதியாண்டின் அதே காலக் கட்டத்தில் சுமார் 460 மில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.
  • கர்நாடகாவில் உள்ள சிக்மங்களூரு, குடகு மற்றும் ஹாசன் ஆகிய பகுதிகள் 2022-23 ஆம் ஆண்டில் 2,48,020 மெட்ரிக் டன்களுடன் அரபிகா மற்றும் ரோபஸ்டா ரக காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளன.
  • இதில் கேரளா 72,425 மெட்ரிக் டன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து 18,700 மெட்ரிக் டன்களுடன் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்