TNPSC Thervupettagam

2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சிறந்த வர்த்தகப் பங்குதாரர்

May 18 , 2024 189 days 215 0
  • 2023-24 ஆம் நிதியாண்டில் சுமார்118.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இருவழி வர்த்தகத்துடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குத்தாரராக சீனா உருவெடுத்துள்ளது.
  • GTRI எனப்படும் பொருளாதார சிந்தனைக் குழுவின் தரவுகளின்படி அமெரிக்காவினை சீனா விஞ்சியது.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 118.3 பில்லியன் டாலராக இருந்தது.
  • கடந்த நிதியாண்டில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து 16.67 பில்லியன் டாலராக உள்ளது.
  • அந்த நாட்டுக்கான ஏற்றுமதியில் வளமான வளர்ச்சிக்குப் பங்களித்த முக்கியத் துறைகளில் இரும்புத் தாது, பருத்தி நூல்/இழைகள்/முழுத் தயாரிப்புகள், கைத்தறி, மசாலாப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், நெகிழிப் பொருட்கள் மற்றும் லினோலியம் ஆகியவை அடங்கும்.
  • இதற்கிடையில், 2022-23 ஆம் ஆண்டில் 78.54 பில்லியன் டாலர்களாக இருந்த அமெரிக்காவிற்கான ஏற்றுமதியானது 2023-24 ஆம் ஆண்டில் 1.32 சதவீதம் குறைந்து 77.5 பில்லியன் டாலராக இருந்தது, அதே நேரத்தில் இறக்குமதிகள் சுமார் 20 சதவீதம் குறைந்து 40.8 பில்லியன் டாலராக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்