TNPSC Thervupettagam

2024 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைகள்

April 15 , 2024 227 days 271 0
  • சமீபத்தில் நிறைவடைந்த நிதியாண்டில் (FY24) மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலை கட்டுமானம் ஆனது 12349 கிலோ மீட்டர் அளவினை தொட்டது.
  • இது அதன் கட்டுமானத்தில் பதிவான இரண்டாவது சிறந்த செயல்திறன் ஆக கருதப் பட்டாலும், 13814 கிலோமீட்டர் என்ற ‘உயர் இலட்சிய இலக்கை’ விட குறைவாகவே உள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2023-24 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் ஆனது 20% அதிகரித்துள்ளது.
  • அந்த அமைச்சகம் ஆனது கடந்த ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட 2,64,525 கோடி ரூபாய் மதிப்பிலான தனது திருத்தப்பட்ட மூலதனச் செலவினத்தில் 99.98 சதவீதப் பங்கினை செலவிட்டுள்ளது.
  • இதற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாட்டின் அடிப்படையில் இது மீண்டும் சிறந்த பயன்பாட்டுச் செயல்திறன் ஆக உள்ளது என்ற நிலையில் 2022-23 ஆம் ஆண்டில் இது 99.18% ஆக இருந்தது.
  • நாட்டில் 50,000 கிலோ மீட்டர் நீள அதிவேக நெடுஞ்சாலைகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம் ஆகும்.
  • தற்போது 4,000 கிலோ மீட்டர் நீளமான விரைவுச் சாலைகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன என்பதோடு 6,000 கிலோ மீட்டர் நீளத்திலான சாலைகளின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்