TNPSC Thervupettagam

2024 மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு

June 8 , 2024 40 days 147 0
  • 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தம் 65.79% வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • ஏழாம் கட்ட வாக்குப் பதிவு அளவு 63.88% ஆகும்.
  • லட்சத்தீவில் அதிகபட்சமாக 84% வாக்குகளும், அசாமில் 81% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
  • பீகாரில் மிக குறைந்த பட்ச அளவாக 56.19% வாக்குகள் பதிவாகியுள்ளது.
  • உத்திரப் பிரதேசம் (56.92%) மற்றும் மிசோரம் (56.87%) குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ள இதர மாநிலங்கள் ஆகும்.
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், எதிர்க்கட்சியான INDIA கூட்டணி கட்சி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டுத் தேர்தலில் 67.40% வாக்குகள் பதிவாகியிருந்தன.
  • 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 63,47,509 வாக்காளர்கள் நோட்டா பொத்தானை அழுத்தி 'மேற்கண்டவற்றில் யாரும் இல்லை' என்ற விருப்பத் தேர்வினை தேர்வு செய்துள்ளனர்.
  • குஜராத்தில் உள்ள 25 தொகுதிகளில், 24 தொகுதிகளின் வாக்காளர்களின் மூன்றாவது தேர்வாக நோட்டா பொத்தான் அழுத்தப் பட்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் 2.18 லட்சம் வாக்காளர்கள் ‘மேற்கண்ட எதுவும் இல்லை’ (14.01%) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நோட்டா பதிவில் புதிய சாதனை பதிவாகியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு 1.06 சதவீத வாக்காளர்கள் நோட்டா விருப்பத் தேர்வினை தேர்வு செய்த நிலையில், 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 1.08 சதவீத வாக்காளர்கள் நோட்டா விருப்பத் தேர்வினைத் தேர்வு செய்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்