2024–25 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி
March 26 , 2025 5 days 46 0
இந்தியாவானது 1 பில்லியன் டன் (bt) என்ற அளவிலான வருடாந்திர நிலக்கரி உற்பத்தி அளவினைக் கடந்து 1.03 பில்லியன் உற்பத்தியினை எட்டியுள்ளது.
இது 2023-24 ஆம் ஆண்டில் பதிவான சுமார் 953.3 மில்லியன் டன்கள் என்ற மொத்த உற்பத்தியினை விட 5.24 சதவீதம் அதிகமாகும்.
சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவானது இரண்டாவது மிகப்பெரிய ஒரு நிலக்கரி உற்பத்தியாளராக உள்ளது என்பதோடு மேலும் அதன் மின்சாரத் தேவையில் சுமார் 75 சதவீதத்தினைப் பூர்த்தி செய்ய நிலக்கரி உற்பத்தியினைச் சார்ந்துள்ளது.
இந்திய நாடானது, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து உயர் தர நிலக்கரியை இறக்குமதி செய்கிறது.