TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டிற்குள் யூரியா இறக்குமதி நிறுத்தம்

April 9 , 2024 232 days 271 0
  • உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட மாபெரும் உந்துதல் ஆனது வழங்கீட்டிற்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்துள்ளதால் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் யூரியாவை இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த உள்ளது.
  • பயிர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக என்று இந்தியாவில் கடந்த 60-65 ஆண்டுகளாக இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • நுண்திரவ யூரியா மற்றும் நுண் திரவ டை-அம்மோனியம் பாஸ்பேட் (DAP) போன்ற மாற்று உரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் ஆனது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவிற்கு ஆண்டுதோறும் சுமார் 350 லட்சம் டன் யூரியா தேவைப்படுகிறது.
  • 2014-15 ஆம் ஆண்டில் சுமார் 225 லட்சம் டன்னாக இருந்த இந்தியாவின் நிறுவப்பட்ட உள்நாட்டு உற்பத்தி திறன் ஆனது சுமார் 310 லட்சம் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • தற்போது, வருடாந்திர உள்நாட்டு உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியானது சுமார் 40 லட்சம் டன்களாக உள்ளது.
  • முந்தைய ஆண்டில் 91.36 லட்சம் டன்னாக இருந்த யூரியா இறக்குமதியானது 2022-23 ஆம் ஆண்டில் 75.8 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆகியவற்றிற்கு இடைப் பட்ட காலக் கட்டத்தில் மொத்தம் 7 கோடி நுண் யூரியா குடுவைகள் (ஒவ்வொன்றும் 500 மில்லி) விற்பனை செய்யப்பட்டுள்ளன.
  • ஒரு குடுவை நுண் யூரியா ஆனது 45 கிலோ அளவிலான வழக்கமான ஒரு பை யூரியாவுக்குச் சமமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்