TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் சம்பள உயர்வு

October 21 , 2024 8 days 116 0
  • இந்தியாவில் சராசரி சம்பள உயர்வு 2025 ஆம் ஆண்டில் 9.5 சதவிகிதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டில் பதிவான ஒரு உண்மையான சம்பள உயர்வு 9.5% ஆகும்.
  • இந்தியாவின் சம்பள உயர்வு ஆனது அந்தப் பிராந்தியத்தில் தொடர்ந்து மிகவும் அதிக பட்சமாக இருந்து வருகிறது.
  • வியட்நாம் (7.6%), இந்தோனேசியா (6.5%), பிலிப்பைன்ஸ் (5.6%), சீனா (5%) மற்றும் தாய்லாந்து (5%) போன்ற நாடுகளும் அடுத்த ஆண்டில் அதிக அளவில் சம்பள உயர்வை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • சுமார் 28% நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
  • சுமார் 68% நிறுவனங்கள் முந்தைய ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் தங்கள் எண்ணிக்கையை மாற்றாமல் தொடர உள்ளன.
  • இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் 11% ஆக இருந்த தன்னார்வப் பணித் துறப்பு விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 10.8% ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்