TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் லா நினா நிலைகள்

January 16 , 2025 5 days 63 0
  • பசிபிக் பெருங்கடலில் லா நினா நிலைகள் இறுதியாக வெளிப்பட்டுள்ளன.
  • மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை என்பது சராசரிக்கும் குறைவாக உள்ளது.
  • லா நினா என்பது எல் நினோ தெற்கு அலைவு (ENSO) என்று அழைக்கப்படுகிறது.
  • மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வகைப்படுத்தப்படும் இந்தப் பருவநிலை நிகழ்வு ஆனது, வளி மண்டலத்தின் மேல்மட்ட நிலையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுடன் சேர்ந்து நிகழ்கிறது.
  • ENSO ஆனது உலகளாவிய வளிமண்டலச் சுழற்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தி, அதை மாற்றி யமைத்து மற்றும் அதில் குறுக்கீடுகளை ஏற்படுத்துகிறது, இது உலகளவில் நிலவும் வானிலையில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
  • ENSO ஆனது சூடான பரப்பு (எல் நினோ), குளிர் பரப்பு (லா நினா) மற்றும் நடுநிலை என மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது என்பதோடு இவை சுமார் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரையில் ஒழுங்கற்ற சுழற்சிகளில் நிகழ்கின்றன.
  • லா நினா என்ற நிகழ்வானது கடைசியாக 2020-2023 ஆம் ஆண்டிலும், எல் நினோ நிகழ்வானது 2023-24 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்