மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் மேலும் ஆறு மாதங்களுக்கு ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தினை நீட்டித்துள்ளது.
அம்மாநிலத்தின் ஐந்து பள்ளத்தாக்கு மாவட்டங்களிலுள்ள 13 காவல் நிலையங்களின் அதிகார வரம்பைத் தவிர, இன வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலம் முழுவதும் AFSPA நீட்டிக்கப்பட்டுள்ளது.
AFSPA சட்டமானது 1958 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப் பட்டது.
1981 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் மாநிலத்தில் AFSPA சட்டம் அமலுக்கு வந்தது.
மாநில மற்றும் மத்திய அரசுகள் ஆகிய இரண்டும் சில பகுதிகளை "இடையூறுகளுக்கு உட்பட்டவை" என்று அறிவித்து ஆயுதப் படைகளுக்கு AFSPA சட்டத்தின் கீழ் அதிகாரம் வழங்கி, அறிவிப்புகளை வெளியிடலாம்.