2025 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்புக் காட்சி வாகனங்கள்
January 30 , 2025 2 days 44 0
76வது குடியரசு தினக் கொண்டாட்டங்களில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வினைக் காட்சிப்படுத்தும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அணிவகுப்புக் காட்சி வாகனமானது, 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த அணிவகுப்புக் காட்சி வாகனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
"Eternal Reverence: The Worship of 14 Deities in Tripura - Kharchi Puja" என்ற கருத்துருவிலான திரிபுரா மாநிலத்தின் அணிவகுப்புக் காட்சி வாகனமானது இரண்டாவது இடத்தைப் பெற்றது.
"Etikoppaka Bommalu - Eco-Friendly Wooden Toys - சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் நன்கு தயாரிக்கப் பட்ட பொம்மை வகைகள்" என்ற ஒரு கருத்துருவிலான ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அணிவகுப்புக் காட்சி வாகனமானது மூன்றாவது இடத்தைப் பெற்றது.
படைப் பிரிவுகளில் சிறந்த அணிவகுப்புப் படையாக ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ் படைப் பிரிவு தேர்வு செய்யப்பட்டது.
மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) /துணைப் படைகள் பிரிவில் டெல்லி காவல் அணி வகுப்புப் படை வெற்றி பெற்றது.
மத்திய அமைச்சகங்கள்/துறைகளில், பழங்குடியின விவகாரங்கள் அமைச்சகத்தின் "ஜன்ஜாதிய கௌரவ் வர்ஷ்" என்ற அணிவகுப்புக் காட்சி வாகனத்திற்கு விருதானது வழங்கப் பட்டது.
"அமைச்சகத்தின் விரிவான திட்டங்களின் கீழ் ஆதரவளிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பன்முகப் பயணம்" என்ற சித்தரிப்பிற்காக வேண்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் விருதினை வென்றது.
இதில் கூடுதலாக, இரண்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
"இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்" என்ற கருத்துருவிலான அதன் அணி வகுப்புக் காட்சி வாகனத்திற்காக வேண்டி மத்தியப் பொதுப் பணித் துறைக்கு (CPWD) ஒன்றும்,
மற்றொன்று 'ஜெயதி ஜெய் மமா பாரதம்' நடனக் குழுவிற்கு வேண்டி அதன் நடன நிகழ்ச்சிக்காகவும் வழங்கப்பட்டன.
முதன்முறையாக, 'ஷஷக்த் ஔர் சுரக்சித் பாரத்' (வலுவான மற்றும் பாதுகாப்பான இந்தியா) என்ற கருத்துருவில் முப்படைகளின் அணிவகுப்புக் காட்சி வாகனம் காட்சிப் படுத்தப் பட்டது.