TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டு சிறை கையேடு விதிகளில் திருத்தங்கள்

January 3 , 2025 4 days 70 0
  • சிறைகளில் உள்ள கைதிகள் மத்தியில், அவர்களின் சாதியின் மீதான அடிப்படையில் பாகுபடுத்தி, வகைப்படுத்துவது குறித்து கண்காணிப்பதனை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிறைக் கைதிகளின் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு தீர்வு காண்பதற்காக, 'மாதிரி சிறைக் கையேடு, 2016' மற்றும் 'மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தச் சேவைகள் சட்டம், 2023' ஆகியவை திருத்தப்பட்டுள்ளன.
  • அந்தக் கையேட்டில் கொண்டு வரப்பட்டுள்ள புதியச் சேர்க்கையின்படி, சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளை சாதியின் அடிப்படையில் பாகுபடுத்துவதில்லை, வகைப் படுத்துவதில்லை, பிரிப்பதில்லை என்பதைக் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
  • 2023 ஆம் ஆண்டு மாதிரி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தச் சேவைகள் சட்டத்தின் 'இதர விதிகளில்' மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • 'சிறைகள் மற்றும் சீர்திருத்த மையங்களின் சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்குத் தடை' என்ற புதிய தலைப்பு ஆனது 55(A) பிரிவாக சேர்க்கப் பட்டுள்ளது.
  • சிறைக்குள் உள்ள சாக்கடை அல்லது கழிவுநீர்த் தொட்டியை மனிதர்களே துப்புரவு செய்வது அல்லது அபாயகரமான முறையில் சுத்தம் செய்வது அனுமதிக்கப்படக் கூடாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்