பல்வேறு உலகளாவியச் சவால்களை எதிர்கொள்வதிலும், நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டினை அடைவதிலும் பெரும் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் பங்கை வெளிக் கொணர்வதற்காக என்று ஆண்டுதோறும் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம் கொண்டாடப்படுகிறது.
ஷேக்ஸ்பியரின் பிறந்த மற்றும் மறைந்த நாளைக் குறிக்கும் வகையிலும், மொழி மற்றும் நவீன ஆங்கில மொழியை உருவாக்குவதில் அவரது பங்களிப்பைக் குறிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆங்கில மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
பல மோதல்களுக்கு அமைதியின் வழியாக தீர்வு காணுதல் கொள்கையின் மீதான உறுதிப்பாடு மற்றும் பலதரப்பு நாடுகளின் முடிவெடுத்தல் மற்றும் அரசுமுறைச் செயல்பாடுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றினைக் குறிக்கும் வகையில், சர்வதேச அமைதிக்கான பலதரப்பு மற்றும் அரசுமுறை உறவுகளுக்கான தினம் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
நல்வாழ்வு மற்றும் பிறர் மீதான கருணையைப் பரப்பும் அதே வேளையில், நமது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக என, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று (ஏப்ரல் 26/2025) உலக குணப்படுத்தும் தினம் அனுசரிக்கப்படுகிறது.