டைம் இதழ் ஆனது, அதன் 2025 ஆம் ஆண்டிற்கான மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் மற்றும் வங்காள தேசத்தின் முகமது யூனுஸ் போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் முதல் முறையாக, இந்த ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் ஓர் இந்தியக் குடிமகன் கூட இடம்பெறவில்லை.
வெர்டெக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரேஷ்மா கேவல்ரமணி இப்பட்டியலில் இடம் பெற்று உள்ள முதல் 100 பேரில் ஒருவராக இடம் பெற்றுள்ளார்.