TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை உயர்வு

April 28 , 2025 18 hrs 0 min 38 0
  • தங்கத்தின் விலையானது முதல் முறையாக 10 கிராமுக்கு 1 லட்சம் ரூபாயைத் தாண்டி உயர்ந்து வருகிறது.
  • அமெரிக்க நாட்டின் அதிபர் அங்குள்ள பெடரல் வங்கியின் கையிருப்புகளை மாற்றி அமைக்கும் திட்டங்களை வெளியிட்ட பிறகு சர்வதேச விலைகள் உயர்ந்தன.
  • இந்தியாவில் தங்கத்தின் விலைகள் பொதுவாக சர்வதேச விலைகளைப் பெருமளவில் பின்பற்றுகின்றன.
  • அமெரிக்க டாலர் சரிந்த போதும், உலகளாவியத் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து, விலைகள் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,400 டாலரைத் தாண்டியுள்ளன.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தங்கம் சுமார் 59 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • டாலர் பலவீனமடைவது என்பது, வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கும் பல முதலீட்டாளர்களுக்குத் தங்கத்தினை மிகவும் மலிவு விலையிலானதாக மாற்றுவதால் அது தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கிறது.
  • சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவானது உலகின் இரண்டாவது பெரியத் தங்கச் சந்தையாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் 761 டன்னாக இருந்த தங்கத்தின் தேவையானது, 2024 ஆம் ஆண்டில் 802.8 டன்னாக இருந்தது.
  • நூறு ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக 1925 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான தங்க ஈடு மாற்று விகிதம் 3.31 ரூபாயாகவும், பத்து கிராம் அளவிலான 24 காரட் தங்கம் 18.75 ரூபாயாகவும் விற்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்