TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் திமிங்கலத்தின் ஆயுட்காலம்

January 15 , 2025 2 hrs 0 min 31 0
  • தெற்கு கருந்திமிங்கலங்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளன என்பதோடு அவற்றில் 10% திமிங்கலங்கள் 130 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தைக் கொண்டிருக்கக்கூடும்.
  • இந்த திமிங்கலங்களில் சில 150 ஆண்டுகள் வரை வாழக் கூடும்.
  • இந்த ஆயுட்காலம் ஆனது, அவை வழக்கமாக வாழ்வதாக நம்பப்படும் சுமார் 70-80 ஆண்டுகளை விட சுமார் இரு மடங்கு அதிகமாகும்.
  • வடக்கு அட்லாண்டிக் கருந்திமிங்களின் அதிகபட்ச ஆயுட்காலம் சுமார் 70 ஆண்டுகள் என்று கருதப்பட்டது.
  • இந்த அருகி வரும் உயிரினத்தின் தற்போதைய சராசரி ஆயுட்காலம் 22 ஆண்டுகள் மட்டுமேயாகும், மேலும் அவை அரிதாகவே 50 ஆண்டுகளுக்கு மேலான காலம் வரை வாழ்கின்றன.
  • இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்க்டிக் பகுதியில் உள்ள உள்நாட்டு திமிங்கல வேட்டையாளர்களுடன் பணி புரிந்த அறிவியலாளர்கள், வில் தலை திமிங்கலங்கள் 200 ஆண்டுகள் வரை அல்லது அதற்கு மேல் கூட வாழ முடியும் என்பதை நன்கு வெளிக் கொணர்ந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்